பெரம்பலூர் மாவட்டத்தில் பரவலாக பெய்த கோடை மழை

 

பெரம்பலூர், ஏப்.13: பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று பரவலாக இடியுடன் கோடை மழை பெய்தது. பெரம்பலூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 861 மில்லி மீட்டர் ஆகும். குளிர்கால மழையாக ஜனவரி, பிப்ரவரி மாதங்க ளில் மழை எதுவும் பெய் யாத நிலையில், கோடை காலம் தொடங்கியும் மழை பெய்யாததால் பெரம்பலூர் மாவட்டத்தில் பருத்தி மக்காச்சோளம் உள்ளிட்ட மானாவாரி பயிர்களை சாகுபடி செய் யும் விவசாயிகள் மழைக் காக காத்துக் கிடந்தனர். குறிப்பாக பங்குனி மாத இறுதியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக, மாவட்டத்தில் 100 டிகிரிக்கு மேல் வெப்பத்தின் தாக்கம் காணப்பட்டது.

சாலைக ளில் அனல்காற்று வீசியது. இதனால் அவதிப்பட்டு வந்த நகரவாசிகள் மற்றும் கிராமப்புற விவசாயிகள் மழையை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்நிலையில் நேற்று (12ம் தேதி) 2024ம் ஆண் டுக்கு முதல்மழையாகவும், சோபகிருது ஆண்டின் கடைசிமழையாகவும் குறிப் பாக லேசான இடியுடன் கூடிய கோடை மழையாகப் பெய்தது. விவசாயத்துக்கு பயனில்லாத மழையாக இருந்த போதும், வெப்பத்தின் சூட்டைத் தணிக்கும் மழையாக இருந்ததால் பெரம்பலூர் மாவட்ட பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

The post பெரம்பலூர் மாவட்டத்தில் பரவலாக பெய்த கோடை மழை appeared first on Dinakaran.

Related Stories: