செந்துறை ஒன்றியத்தில் 100% வாக்களிக்க விழிப்புணர்வு காணொளி

 

ஜெயங்கொண்டம், ஏப்.14: செந்துறை ஒன்றியத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 100% வாக்களிக்க எல்இடி திரை வாகனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வாக்காளர்கள் 100 நூறு சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி அரியலூர் மாவட்டத்தில் செந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொன்பரப்பி, மருவத்தூர், செந்துறை பேருந்து நிலையம், மார்கெட் ஆகிய மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதி நவீன எல் இ டி விளம்பர திரை வாகனம் மூலம் குறும்படங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இதில் அனைவரும் வாக்களிப்போம், 100சதவீதம் தவறாமல் வாக்களிப்போம், தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா, இவிசில் ஆப் குறித்த விளக்கம், மற்றும் வாக்குச்சாவடி அமைவிடம் வாக்காளர் பட்டியலில் பெயர் விவரம் தொடர்பான சந்தேகங்களுக்கு 1950 என்ற இலவச தொலைபேசி எண் மூலமாக தெரிந்து கொள்வது குறித்த குறும்படங்களும் ஒளிபரப்பப்பட்டன. இந்நிகழ்ச்சியானது அரியலூர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் திரையிட்டுக் காண்பிக்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் செந்துறை பகுதியில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post செந்துறை ஒன்றியத்தில் 100% வாக்களிக்க விழிப்புணர்வு காணொளி appeared first on Dinakaran.

Related Stories: