ஐபிஎல் டி20 வெற்றி பாதைக்கு திரும்புமா டெல்லி? லக்னோவுடன் இன்று மோதல்

லக்னோ: ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோவில் நடைபெறும் 26வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் மோதுகின்றன. முதல் போட்டியில் ராஜஸ்தானிடம் தோல்வி அடைந்த லக்னோ, அடுத்த 3 போட்டியில் பஞ்சாப், பெங்களூரு, குஜராத்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது. இன்று சொந்த ஊரில் வெற்றியை தொடரும் முனைப்பில் உள்ளது. பேட்டிங்கில் டிகாக், கேப்டன் ராகுல், மார்கஸ் ஸ்டோனிஸ், பூரன் என வலுவான பேட்டிங் வரிசை உள்ளது. பவுலிங்கில் யாஷ் தாகூர், நவீன் உல்ஹக், அர்ஷத்கான், சுழலில் ரவி பிஷ்னோய், சித்தார்த் அற்புதமாக செயல்பட்டு வருகின்றனர். மறுபுறம் டெல்லி அணி 5 போட்டியில் ஒரே ஒரு வெற்றி (சிஎஸ்கே.வுக்கு எதிராக மட்டுமே பெற்றுள்ளது) பஞ்சாப், கேகேஆர், ராஜஸ்தான், மும்பையிடம் தோல்வி அடைந்து பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

இதனால் இன்று வெற்றிபாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பேட்டிங்கில் ரிஷப்பன்ட், டேவிட் வார்னர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மட்டுமே ஓரளவு ரன் எடுத்துள்ளனர். மற்ற யாரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பவுலிங்கில் அன்ரிச் நார்ட்ஜே, இஷாந்த் சர்மா, கலீல் அகமது ரன்களை வாரி இறைத்து வருகின்றனர். சூப்பர் பார்மில் உள்ள லக்னோவை, டெல்லி வீழ்த்தி 2வது வெற்றிபெறுமா என பொறுத்திருந்து பார்ப்போம். இருஅணிகளும் இதுவரை 3 போட்டிகளில் மோதி உள்ளன. இதில் அனைத்திலும் லக்னோ தான் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post ஐபிஎல் டி20 வெற்றி பாதைக்கு திரும்புமா டெல்லி? லக்னோவுடன் இன்று மோதல் appeared first on Dinakaran.

Related Stories: