ராமநாதபுரம் தொகுதியில் ஐயா ஓபிஎஸ்சுக்கு கரும்பு விவசாயி சின்னம்: குழப்பத்தில் வாக்காளர்கள்

ராமநாதபுரம் தொகுதியில் பாஜ கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் மட்டும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஓ.பன்னீர்செல்வம் பெயருடைய 5 பேர் சுயேச்சையாக போட்டியிடுகின்றனர்.

இதில் கரும்பு விவசாய சின்னத்தில் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம் கோயிலில் பூஜை போட்டு முதல் நாள் பிரசாரத்தை தொடங்கினார். அவர் வெளியிட்டுள்ள நோட்டீசில் ஐயா. ஓ.பன்னீர்செல்வத்துக்கு கரும்பு விவசாயி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தைத்தான், அவரது ஆதரவாளர்கள் ஐயா ஓ.பன்னீர்செல்வம் என்று கூறுவார்கள்.

தற்போது புது வேட்பாளரும் தன்னை ஐயா ஓ.பன்னீர்செல்வம் என்று பிட்நோட்டீஸ் அச்சடித்து தொகுதி முழுவதும் விநியோகம் செய்ய தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
மக்களுக்கு நல்லது செய்வதற்கு போட்டியிடுகிறேன். இவ்வளவு நாள் காணாமல் போகவில்லை, ஆதரவு கேட்டு ஆங்காங்கே சென்றேன். அங்கு நல்ல ஆதரவு கிடைத்தது. தேர்தல் முடிந்த பிறகு எந்த கட்சியிலும் சேருவதற்கு வாய்ப்பில்லை. நல்ல நேரம் முடியப்போகிறது.அடுத்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்று கூறியபடி வேகமாக சென்றார் அந்த ஓபிஎஸ்.

The post ராமநாதபுரம் தொகுதியில் ஐயா ஓபிஎஸ்சுக்கு கரும்பு விவசாயி சின்னம்: குழப்பத்தில் வாக்காளர்கள் appeared first on Dinakaran.

Related Stories: