புதுக்கோட்டையில் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் உள்ள பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் வைபவம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, காப்புகட்டுதல் மற்றும் கொடியேற்ற நிகழ்ச்சியுடன் திருவிழா துவங்கியது. இந்நிலையில் நேற்று காலை முதல் பக்தர்கள் பால்குடம் மற்றும் அக்னி சட்டி ஏந்தியும், அலகு குத்தியும், பிறந்த குழந்தைகளுக்கு கரும்பு தொட்டில் கட்டியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் மாலை பாரி வேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (திங்கள்) நடைபெற உள்ளது. நார்த்தாமலை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. எஸ்பி வந்திதாபாண்டே உத்தரவின் பேரில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேர் திருவிழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வருகின்ற 13-ம் தேதி வேலை நாளாக அறிவிப்பு; 13-ம் தேதி வேலை நாட்களாக உள்ள அலுவலகங்களுக்கு 14-ம் தேதி வேலை நாள் எனவும் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா அறிவித்துள்ளார்.

The post புதுக்கோட்டையில் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை appeared first on Dinakaran.

Related Stories: