ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு


காவேரிப்பாக்கம்: ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதன்காரணமாக பொது மக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள இளநீர், மோர், தர்பூசணி, உள்ளிட்ட உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகள் உட்கொண்டு வருகின்றனர். வெப்பத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள மனிதர்கள் மட்டுமன்றி, ஆடு, மாடு, குரங்கு உள்ளிட்ட விலங்குகள் தண்ணீர் தேடி செல்கின்றன.

இந்நிலையில் காவேரிப்பாக்கம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 10க்கும் மேற்பட்ட குரங்குகள் உள்ளன. நேற்று வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க தரையில் தேங்கிய தண்ணீரை குரங்குகள் குடித்து தாகத்தை தணித்து கொண்டது. மேலும், அங்குள்ள பொது மக்கள் குரங்குகளுக்கு பிஸ்கட், தண்ணீர், உணவு கொடுத்து வருகின்றனர்.

The post ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: