தேசிய அளவிலான ஆக்சுவேரியல் உச்சிமாநாட்டில் சிறந்த ஆராய்ச்சி கட்டுரைகளுக்கு பரிசு

 

திருச்சி, ஏப்.7: திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி, முதுகலை காப்பீடு அறிவியல் துறை சார்பில் தேசிய அளவிலான ஆக்சுவேரியல் உச்சிமாநாடு இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆக்சுவேரியல் வல்லுநர்கள், கார்ப்பரேட் துறைகள் மற்றும் பிற தொழில் வல்லுநர்கள் கூடி, ஆக்சுரியல் துறையில் நடக்கும் நிகழ்வுகளை விவாதிக்கும் கருவாக சமூக பாதுகாப்பு மற்றும் பொதுக் கொள்கையை வடிவமைத்தல் என்ற தலைப்பில் நடைபெற்றது.

இந்த தேசிய அளவிலான உச்சி மாநாட்டில் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள ஹெரியட் வாட் பல்கலைகழகத்தின் பேராசிரியர் சபரிநாத் விஜயகுமார், ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் மூத்த அதிகாரி சீனிவாசன், எல்ஐசி காப்பீட்டு நிறுவனத்தின் மூத்த மண்டல மேலாளர் சுஜித் ஆகியோர் அதிநவீன நுட்பங்கள், வழிமுறைகள் மற்றும் நடைமுறையில் பயன்படுத்தப்படும் கருவிகள் பற்றிய விவாதங்கள் மற்றும் பட்டறைகளை வழிநடத்தினர்.

விழாவில் “சுருக்க புத்தகம் மற்றும் இதழ்” வெளியிடப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வாக மாணவர்களின் 128 ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிடப்பட்டன. தொழில்நுட்ப அமர்வுகள், வினாடி வினாக்கள் மற்றும் விளம்பரங்களை உருவாக்கும் சவால்கள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் மற்றும் சிறந்த ஆராய்ச்சி கட்டுரைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கல்லூரியில் துணை முதல்வர் அழகப்பா மோசஸ் தலைமை வகித்தார். துறை தலைவர் ஹெப்ஸிபா பியூலா, உதவி பேராசிரியர் பிராங்க்ளின் ஞானய்யா, ஆகியோர் மாநாட்டு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர்.

The post தேசிய அளவிலான ஆக்சுவேரியல் உச்சிமாநாட்டில் சிறந்த ஆராய்ச்சி கட்டுரைகளுக்கு பரிசு appeared first on Dinakaran.

Related Stories: