லோடு வேனில் எடுத்து சென்ற ₹55 ஆயிரம் பறிமுதல் அணைக்கட்டு அருகே

அணைக்கட்டு, ஏப்.6: அணைக்கட்டு அருகே லோடு வேனில் எடுத்து சென்ற ₹55 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியில், தேர்தல் நிலை கண்காணிப்பு குழு 2ஐ சேர்ந்த துணை பிடிஓ தலைமையிலான குழுவினர் நேற்று மதியம் பின்னத்துறை பகுதியில் வாகன சோதனை செய்தனர். அப்போது அவ்வழியாக வந்த லோடு வேனை சந்தேகத்தின் பேரில் மடக்கி சோதனை செய்தனர். அதில் ₹55 ஆயிரம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் வேனில் சென்றவர்களிடம் பணம் எடுத்துச் செல்வதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லை என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து குழுவினர் பணத்தை பறிமுதல் செய்து அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், தாசில்தாருமான வேண்டாவிடம் ஒப்படைத்தனர். பின்னர் தேர்தல் துணை தாசில்தார் திருக்குமரேசன் மற்றும் பணியாளர்கள் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை கவரிங் லெட்டர் தயார் செய்து, சீல் வைத்து அதனை வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கருவூலகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

The post லோடு வேனில் எடுத்து சென்ற ₹55 ஆயிரம் பறிமுதல் அணைக்கட்டு அருகே appeared first on Dinakaran.

Related Stories: