வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பை எதிர்த்து மனு வழக்கு தொடர்ந்தவர் ₹1 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும் உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஏப். 6: வடலூரில் சத்திய ஞான சபை முன் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கு தொடர்ந்தவரின் நேர்மையை நிரூபிக்க ஒரு லட்சம் ரூபாயை டெபாசிட் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வடலூர் வள்ளலார் சத்யஞான சபை வளாகத்தில் 71 ஏக்கரில் பக்தர்களின் வசதிக்காக வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதை எதிர்த்து, தமிழ் வேங்கை என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள், ஏற்கனவே ஒரு வழக்கு உள்ள நிலையில் ஒரே விஷயத்துக்காக எத்தனை வழக்கு தாக்கல் செய்யப் போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பி, மனுதாரர் தனது நேர்மையை நிரூபிக்க உயர் நீதிமன்ற பதிவாளரிடம் ரூ.1 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை வரும் 24ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

The post வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பை எதிர்த்து மனு வழக்கு தொடர்ந்தவர் ₹1 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும் உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: