“பாஜவில் சேராவிட்டால் கைது” டெல்லி அமைச்சர் அடிசிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்: 8ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவு

புதுடெல்லி: பாஜவில் சேர மிரட்டல் விடுத்ததாக கூறியது பற்றி விளக்கம் கேட்டு டெல்லி அமைச்சர் அடிசிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. டெல்லி மதுபான வழக்கில்என்னையும், அமைச்சர் சவுரப் பரத்வாஜ், எம்.எல்.ஏ துர்கேஷ் பதக், எம்.பி. ராகவ் சதா ஆகியோரை கைது செய்ய திட்டமிட்டுள்ளனர். பாஜவில் சேர வேண்டும், இல்லையெனில் ஒரு மாதத்தில் கைது செய்யப்படுவீர்கள்” என ஒன்றிய பாஜ அரசு மிரட்டல் விடுத்ததாக டெல்லி அமைச்சர் அடிசி அண்மையில் ஒரு குற்றச்சாட்டை தெரிவித்திருந்தார்.

அடிசியின் இந்த குற்றச்சாட்டு பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து மறுப்பு தெரிவித்த பாஜ, தேர்தல் ஆணையத்திலும புகார் அளித்தது. இந்நிலையில் அடிசிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், “நீங்கள் தேசிய தலைநகர் டெல்லி அரசின் அமைச்சராகவும், ஒரு அரசியல் கட்சியின் தலைவராகவும் இருக்கிறீர்கள். தேர்தல் நேரத்தில் வாக்காளர்கள் தங்கள் தலைவர்கள் என்ன சொன்னாலும் அதை நம்புகிறார்கள். தலைவர்கள் வௌியிடும் அறிக்கைகள் பிரசாரங்களை பாதிக்கிறது. உங்கள் கருத்துக்கு ஆதாரம் இருக்க வேண்டும். இதுபற்றி வரும் 8ம் தேதிக்குள்(திங்கள்கிழமை) பதிலளிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post “பாஜவில் சேராவிட்டால் கைது” டெல்லி அமைச்சர் அடிசிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்: 8ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: