தேர்தல் பத்திர கணக்கில் எஸ்.பி.ஐ வங்கி தில்லுமுல்லு: கோடக் குழுமம் வாங்கியது ரூ.131 கோடி.! எஸ்பிஐ கணக்கு காட்டியது ரூ.60 கோடி

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ளது. இந்த தரவுகள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், அதில் பல குளறுபடிகள், தில்லுமுல்லு நடந்துள்ளது அம்பலமாகி உள்ளது. கோடக் வங்கி குழும நிறுவனமான இன்பினா கேபிடல் கடந்த 2019ம் நிதியாண்டில் ரூ.30 கோடிக்கும், 2020ல் 76 கோடிக்கும், 2022ல் ரூ.25 கோடிக்கும் என மொத்தம் ரூ.131 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. இது அந்த நிறுவனம் வெளியிட்ட ஆண்டு அறிக்கைகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், எஸ்.பி.ஐ வங்கி வெளியிட்ட தகவலின்படி, 2020ல் ரூ.35 கோடிக்கும், 2022ல் ரூ.25 கோடிக்கும் என மொத்தம் ரூ.60 கோடிக்கு மட்டும் தேர்தல் பத்திரங்கள் வாங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மீதமுள்ள ரூ. 71 கோடி தேர்தல் பத்திரங்கள் தொடர்பான கணக்கு விவரங்களை எஸ்.பி.ஐ வெளியிடவில்லை. எஸ்.பி.ஐ புள்ளிவிவரப்படி இன்பினா கேபிடல் நிறுவனம் வாங்கிய ரூ60 கோடி தேர்தல் பத்திரங்களையும் ஆளும் பாஜவுக்குதான் வழங்கியுள்ளது. அந்த காலக்கட்டத்தில் ரிசர்வ் வங்கி கோடக் மஹிந்திரா வங்கிக்கு பல்வேறு சலுகைகளை வழங்கியிருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே ஒட்டு மொத்தமாக ரூ.131 கோடி தேர்தல் பத்திரங்களையும் இன்பினா நிறுவனம் பாஜவுக்குதான் தந்திருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. பாஜவுக்கு தரப்பட்ட நிதியை குறைத்து காட்ட எஸ்பிஐ முயற்சிப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.

The post தேர்தல் பத்திர கணக்கில் எஸ்.பி.ஐ வங்கி தில்லுமுல்லு: கோடக் குழுமம் வாங்கியது ரூ.131 கோடி.! எஸ்பிஐ கணக்கு காட்டியது ரூ.60 கோடி appeared first on Dinakaran.

Related Stories: