திருத்தணியில் துணை ராணுவப் படை கொடி அணிவகுப்பு

திருத்தணி: தேர்தலில் பாதுகாப்பு உறுதிப்படுத்தி, பொதுமக்கள் அச்சமின்றி வக்களிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் மத்திய துணை ராணுவப் படையினர் மற்றும் போலீசார் இணைந்து திருத்தணி முக்கிய பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடத்தினர். அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருத்தணி சட்டமன்ற தொகுதியில் உள்ள 330 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு அமைதியான முறையில் நடைபெறுவதை உறுதிப்படுத்தவும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக மத்திய துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட திருத்தணிக்கு வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில், பொதுமக்கள் மத்தியில் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செயயும் வகையில் திருத்தணியில் நேற்று மாலை துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினர் மற்றும் திருத்தணி கோட்ட போலீசார் சித்தூர் சாலை முதல் ரயில் நிலையம், மா.பொ.சி சாலை, அரக்கோணம் சாலை வழியாக திருத்தணி முருகன் கோயில் மலைப்பாதை வரை கொடி அணிவகுப்பு நடத்தினர். இதில் டி.எஸ்.பி விக்னேஷ், பயிற்சி டி.எஸ்.பி தர்ஷிகா, ஆய்வாளர்கள் மதியரசன், தர்மலிங்கம், ராஜகோபால், உதவி காவல் ஆய்வாளர் ராக்கிகுமாரி உட்பட போலீசார் பங்கேற்றனர்.

The post திருத்தணியில் துணை ராணுவப் படை கொடி அணிவகுப்பு appeared first on Dinakaran.

Related Stories: