திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு

திருவள்ளூர், ஏப். 4: திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு வாக்குச்சாவடி மையங்களை, குறிப்பாக பதற்றமான வாக்குச்சாவடி மற்றும் 90% மேல் வாக்குப்பதிவு நடைபெற்ற வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்திய தேர்தல் ஆணையம் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி அன்று தமிழ்நாட்டிற்கு வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் 212 பதற்றமான வாக்குச்சாவடி மையங்களும், 6 வாக்குச்சாவடி மையங்கள் 90 சதவீதத்திற்கு மேல் வாக்குப்பதிவு நடைபெற்று குறிப்பிட்ட நபருக்கு அதிக வாக்குப்பதிவு பெற்ற வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.

திருவள்ளூர் நாடாளுமன்ற (தனி) தொகுதியில் 170 பதற்றமான வாக்குச்சாவடி மையங்களும், 5 வாக்குச்சாவடி மையங்கள் 90 சதவீதத்திற்கு மேல் வாக்குப்பதிவு நடைபெற்ற வாக்குச்சாவடி மையங்களாக கண்டறியப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் 15 பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள், 4 வாக்குச்சாவடி மையங்கள் 90 சதவீதத்திற்கும் மேல் வாக்குப்பதிவு நடைபெற்ற மையங்கள் உள்ளன. ஆகவே குமிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உட்பட்ட தண்டலுசேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பாலவாக்கம், எகுமதுரை, நாயுடு குப்பம் ஆகிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்டு அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, சென்னை இருந்து ஐதராபாத் செல்லும் நெடுஞ்சாலை உள்ள பெத்திக்குப்பம் நவீன சோதனைச் சாவடி மையத்தில் வரும் வாகனங்களை தேர்தல் பணியாளர்கள் மற்றும் காவல் துறையினர்கள் சோதனையிட்டதை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்ல உள்ள தள வாடப் பொருட்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் பயிற்சி ஆட்சியர்ஆயுஷ் வெங்கட் வதஸ், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் அலுவலர் கணேசன், காவல்துறை துணை கண்காணிப்பாளர் கிரியாசக்தி, கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பிரித்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: