காரைக்காலில் நூறு சதவீத வாக்குப்பதிவு இளம் வாக்காளர்கள் விழிப்புணர்வு பேரணி

காரைக்கால், ஏப். 4: இந்திய தேர்தல் ஆணையத்தால் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு காரைக்கால் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் அதன் ஒரு அங்கமாக விளங்கும் ஸ்வீப்பும் இணைந்து 100% வாக்கினை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தி வருகிறது. அதன் தொடர் நிகழ்வாக காரைக்காலில் 100% சதவீத வாக்குப்பதிவை ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ, மாணவிகள், இளம் வாக்காளர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஆட்சியர் வளாகத்தில் தொடங்கிய பேரணியை மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் கொடியை அசைத்து துவக்கி வைத்தார். இந்த நடை பயண பேரணி பாரதி வீதி வழியாக தந்தை பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளியை சென்று அடைந்தது.

இப்பேரணியில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த முதல் நிலை வாக்காளர்களான 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அதாவது அனைவரும் மறவாமல் கண்ணியத்துடன் வாக்களிக்க வேண்டும், காரைக்கால் மாவட்டத்தில் 100% வாக்கினை உறுதி செய்ய வேண்டும், நேர்மையாக வாக்களிக்க வேண்டும், மேலும் மாசுபாடு இன்றி பசுமை முறையில் வாக்களிக்க வேண்டும், அனைவரும் வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டு விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொண்டனர். இந்நிகழ்வினை துவக்கி வைத்து பேசிய மாவட்ட தேர்தல் அதிகாரி மணிகண்டன் இளம் வாக்காளர்களின் வாக்கு மிகவும் முக்கியமானது என்றும் அனைவரும் வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

The post காரைக்காலில் நூறு சதவீத வாக்குப்பதிவு இளம் வாக்காளர்கள் விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Related Stories: