நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடு பணிகள் காரைக்காலில் ஆலோசனை கூட்டம்

காரைக்கால், ஏப். 4: இந்திய தேர்தல் ஆணையத்தால் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு காரைக்கால் மாவட்டத்தில் தேர்தல் சம்பந்தமான பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. அதன் தொடர் நிகழ்வாக தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் பொது பார்வையாளர் அசித்தா மிஸ்ரா காரைக்கால் மாவட்டத்திற்கு வருகை புரிந்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி மணிகண்டன் உடன் நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசனையில் ஈடுபட்டார். மேலும் எம்.சி.சி. மற்றும் எம்.சி.எம்.சி. உள்ளிட்டவைகளின் செயல்பாடுகள் குறித்தும் 24 மணி நேரமும் ஆட்சியர் வளாகத்தில் இயங்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். மாவட்ட தேர்தல் அதிகாரி மணிகண்டன் அனைத்து விபரங்களையும் எடுத்துரைத்தார். இந்நிகழ்வில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மனீஷ், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ஜான்சன், சச்சிதானந்தன், துணை மாவட்ட தேர்தல் அதிகாரி செந்தில்நாதன், காவல் கண்காணிப்பாளர்கள் சுப்பிரமணியன் (தெற்கு), பாலச்சந்திரன் (வடக்கு) மற்றும் அனைத்து தேர்தல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடு பணிகள் காரைக்காலில் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: