தண்ணீர் பிரச்னைக்கு தீர்வாக பாலாறு குண்டாறு இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும்; பிரசாரத்தில் ஓபிஎஸ் உறுதி

தொண்டி, ஏப்.4: தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் பாலாறு குண்டாறு இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும் என்று திருவாடானை பிரசாரத்தில் ஓபிஎஸ் தெரிவித்தார். ராமநாதபுரம் மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார். நேற்று திருவாடானை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இளங்குன்றம், நம்புதாளை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசுகையில், ராமநாதபுரம் மாவட்டத்தின் தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் பாலாறு, குண்டாறு இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும். ராமநாதபுரத்திலேயே தங்கி இப்பகுதி மக்களுக்கு சேவை செய்வேன் என்றார். மாவட்ட செயலாளர் தர்மர், சிவகங்கை மாவட்ட செயலாளர் அசோகன், மாவட்ட பிரதிநிதி ஆணி முத்து வெற்றிவேலன், ஒன்றிய செயலாளர் கேகேபாண்டி, இளைஞர் அணி செல்வநாயகம், பாஜக நிர்வாகி குழந்தை நாதன் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .

The post தண்ணீர் பிரச்னைக்கு தீர்வாக பாலாறு குண்டாறு இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும்; பிரசாரத்தில் ஓபிஎஸ் உறுதி appeared first on Dinakaran.

Related Stories: