பிரபல குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இனைந்தார்


டெல்லி: பிரபல குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் காங்கிரஸில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் இணைந்துள்ளார். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் விஜேந்தர் சிங் இணைந்தார். 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் டெல்லியில் போட்டியிட்டு விஜேந்தர் சிங் தோல்வி அடைந்தார். பாஜகவில் இணைந்த விஜேந்தர் சிங்குக்கு மக்களவை தேர்தலில் போட்டியிட அக்கட்சி வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

பிரபல குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் காங்கிரஸில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். இந்தியாவின் முதல் ஒலிம்பிக் பதக்கம் வென்றவரும், காங்கிரஸ் தலைவருமான விஜேந்தர் சிங் அக்கட்சியிலிருந்து விலகியதையடுத்து தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் விஜேந்திர சிங் தெற்கு தில்லி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்

நடிகரும் தற்போதைய எம்பியுமான ஹேமாலினி மீண்டும் போட்டியிடும் மதுராவில் கட்சியின் வேட்பாளராக விஜேந்தர் சிங் பெயர் கடந்த சில நாள்களாக பேசப்பட்டு வந்தது. ஹரியாணா, மேற்கு உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அரசியல் செல்வாக்கைக் கொண்ட ஜாட் சமூகத்திலிருந்து வந்தவர் விஜேந்தர் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

பிறகு விஜேந்தர் சிங் கூறுகையில், ‛‛ விளையாட்டு துறையை ஊக்குவிக்கும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பா.ஜ.க ஆட்சியில் விளையாட்டு வீரர்களுக்கான மதிப்பு அதிகரித்து உள்ளது. மோடிக்கும், அமித்ஷாவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

விஜேந்தர் சிங் ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர். இச்சமூகத்தை சேர்ந்தவர்கள் ஹரியானா, மேற்கு உ.பி., ராஜஸ்தானில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இதனால், அப்பகுதிகளில் தேர்தலில் பா.ஜ.கவுக்கு கூடுதல் செல்வாக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post பிரபல குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இனைந்தார் appeared first on Dinakaran.

Related Stories: