திகார் சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 15 நாட்களில் 4 கிலோ எடை குறைந்துவிட்டதாக ஆம் ஆத்மி தகவல்..!!

டெல்லி: திகார் சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 15 நாட்களில் 4 கிலோ எடை குறைந்துவிட்டதாக ஆம் ஆத்மி தகவல் தெரிவித்துள்ளது. அமலாக்கப்பிரிவின் 11 நாள் காவல் முடிந்து, திகார் சிறைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அழைத்துச் செல்லப்பட்டார். கைது செய்யப்பட்ட மார்ச் 21 முதல் தற்போது வரை அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி திகார் சிறையில் உள்ளார். திகார் சிறைக்கு அழைத்துவரப்பட்டபோது கெஜ்ரிவால் உடல் எடை 55 கிலோவாக இருந்தது என்று சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கெஜ்ரிவால் உடல் எடை குறைந்துள்ளதாக ஆம் ஆத்மி வெளியிட்ட தகவலை திகார் சிறை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

The post திகார் சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 15 நாட்களில் 4 கிலோ எடை குறைந்துவிட்டதாக ஆம் ஆத்மி தகவல்..!! appeared first on Dinakaran.

Related Stories: