மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை சோதனை; இதுவரை ரூ.4.10 கோடி பறிமுதல்

 

ஈரோடு, ஏப்.3: ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் இதுவரை நடத்திய சோதனையில் ரூ.4.10 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உள்பட்ட கருங்கல்பாளையம் செக்போஸ்ட் பகுதியில் நேற்று முன் தினம் அதிகாலை முதல் நேற்று மதியம் வரை தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட சோதனையில் காரில் வந்த சிவகுமார் என்பவரிடம் ரூ.1 லட்சத்து 64 ஆயிரத்து 600, வைராபாளையம் 4 ரோட்டில் அப்பாஸ் என்பவர் எடுத்து வந்த 1 லட்சத்து 6 ஆயிரத்து 510, ஈரோடு மேற்கு தொகுதிக்கு உள்பட்ட லட்சுமி நகர் பஸ் ஸ்டாப்பில் ரஹமத்துல்லா என்பவரிடம் இருந்து ரூ.23 லட்சத்து 47 ஆயிரத்து 300 மற்றும் 2 செக், அதே பகுதியில் உமர் என்பவரிடமிருந்து ரூ. 70 ஆயிரம், நசியனூர் பைபாஸ் சாலையில் விஜயகுமார் என்பவரிடமிருந்து ரூ. 73 ஆயிரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதுவரை ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு கிழக்கு தொகுதியில் ரூ. 73 லட்சத்து 53 ஆயிரத்து 207, ஈரோடு மேற்கில் ரூ.1 கோடியே 83 லட்சத்து 52 ஆயிரத்து 202, மொடக்குறிச்சியில் ரூ.7 லட்சத்து, 82 ஆயிரத்து 670, பெருந்துறையில் ரூ.26 லட்சத்து 89 ஆயிரத்து 615, பவானியில் ரூ.20 லட்சத்து 20 ஆயிரத்து 300, அந்தியூரில் ரூ. 4 லட்சத்து 84 ஆயிரத்து 850, கோபியில் ரூ.24 லட்சத்து 7 ஆயிரத்து 790, பவானிசாகரில் ரூ. 69 லட்சத்து 26 ஆயிரத்து 328 ஆகியவை என மொத்தம் ரூ.4 கோடியே 10 லட்சத்து 16 ஆயிரத்து 962 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில், உரிய ஆவணங்கள் வழங்கியதன் அடிப்படையில், ரூ.1 கோடியே 81 லட்சத்து 47 ஆயிரத்து 265 திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.2 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 697, மாவட்டக் கருவூலத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

The post மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை சோதனை; இதுவரை ரூ.4.10 கோடி பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: