ஆந்திரா உள்பட 5 மாநிலங்களில் 8 கலெக்டர், 12 எஸ்பிக்கள் அதிரடி இடமாற்றம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை

புதுடெல்லி: நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ்குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ்குமார், சுக்பிர்சிங் சாந்து ஆகியோர் நேற்று டெல்லியில் ஆலோசனை நடத்தினார்கள். அதை தொடர்ந்து அசாம், பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பணியாற்றிய 8 கலெக்டர்கள், 12 எஸ்பிக்களை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளனர். ஆந்திராவில் கிருஷ்ணா, அனந்தபுரமு, திருப்தி மாவட்ட கலெக்டர்களும், பிரகாசம், பால்நாடு, சித்தூர், அனந்தபுரமு, நெல்லூர் மாவட்ட எஸ்பிக்களும், குண்டூர் ஐஜியும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அசாம் மாநிலத்தில் ஊடல்கிரி கலெக்டர், பீகார் மாநிலத்தில் போஜ்பூர் மாவட்டத்தின் கலெக்டர் மற்றும் எஸ்பி, நவாடா மாவட்டத்தின் கலெக்டர் மற்றும் எஸ்பி, ஜார்கண்ட் மாநிலத்தில், தியோகர் மாவட்ட எஸ்பி, ஒடிசாவில் கட்டாக், ஜகத்சிங்பூர் கலெக்டர்கள், அங்குல், பெஹ்ராம்பூர், குர்தா, ரூர்கேலா மாவட்ட எஸ்பிக்கள், கட்டாக் டிசிபி, கட்டாக் சென்ட்ரல் ஐஜி ஆகியோரை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் காலியாக உள்ள ராஞ்சி புறநகர் எஸ்பி, பாலமு டிஜஜி, தும்கா ஐஜி பதவிகளை உடனே நிரப்பவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

The post ஆந்திரா உள்பட 5 மாநிலங்களில் 8 கலெக்டர், 12 எஸ்பிக்கள் அதிரடி இடமாற்றம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: