பயிர்களில் மஞ்சள் நோய் தாக்கம்

வருசநாடு, ஏப்.2: க.மயிலாடும்பாறை பகுதியில் மூலக்கடை, குமணன்தொழு, வருசநாடு, முருக்கோடை, கோம்பைத்தொழு. மணலாற்று குடிசை, மயிலாடும்பாறை, பொன்னன்படுகை, காமராஜபுரம் ஓயாம்பாறை, ஆளந்தளீர் பின்னத்தேவன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் தரைப்பீன்ஸ், அவரை, முருங்கைபீன்ஸ், உள்ளிட்ட சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனைத் தொடர்ந்து தற்பொழுது அதிக அளவில் வெயில் தாக்கம் இருந்து வருகிறது. இதன்காரணமாக பீன்ஸ், அவரை உள்ளிட்ட கொடிகளில் மஞ்சள் நோய் தாக்கம் இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.நோய் தாக்கம் காரணமாக இலைகள் மஞ்சள் நிறத்தில் மாறி பின்பு காய்ந்து கொடிகளில் இருந்து உதிர்ந்து விழுவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து கடமலைக்குண்டு தோட்டக்கலைத் துறை அதிகாரி கூறுகையில்,“சில விவசாயிகள் தனியார் கடைகளில் விதைகளை வாங்குவதால் இது போன்ற பிரச்னைகள் வருகிறது. எனவே அரசு சார்ந்த நிறுவனங்களில் விதைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும்’’ என்றார்.

The post பயிர்களில் மஞ்சள் நோய் தாக்கம் appeared first on Dinakaran.

Related Stories: