திருத்துறைப்பூண்டியில் தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமை சங்க கூட்டம்

திருத்துறைப்பூண்டி, ஏப்.2: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே விளக்குடியில் தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்கம் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் செய்திட வேண்டிய தேர்தல் வாக்குறுதி பற்றிய தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்கத்தின் அறிவிப்பு கூட்டம் மாநில தலைவர் ராசபாலன் தலைமையில் நடைபெற்றது, மாவட்ட செயலாளர் தாஜீதீன், மாவட்ட தலைவர் மாரிமுத்து மகேசன் முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாககுழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். வாக்குறுதி அறிவிப்பு குறித்து ரவிச்சந்திரன் பேசினார். கூட்டத்தில் சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாநில தலைவர் ராசபாலன் பேசுகையில், டெல்டா மண்டல மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற அரசு அறிவிப்பை உண்மை உறுதிப்படுத்தும் விதமாக மண்டல மாவட்டங்களில் விவசாய தொழில்கள் அல்ல வேறு எந்த ஒரு தொழில் ஆலை நிறுவனங்களையும் அனுமதிப்பதில்லை. ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்டு மூடப்பட்ட எண்ணெய் துரப்பண பணிகளை எக்காரணம் கொண்டும் இனி அனுமதிப்பதில்லை. மாவட்டங்களில் போக்குவரத்து தார் சாலைகளில் அருகில் இருந்த பாசனம் மற்றும் வடிகால்களுக்கான வாய்க்கால்களை தூர்த்து வைத்துள்ள தனியார் ஆக்கிரமிப்புகளை மீண்டும் அளவை ஒழுங்குபடுத்தி அதை நீரோட்ட இடமாக மாற்றுவோம் என்று அரசியல் கட்சி வேட்பாளர்கள் வாக்குறுதி அளிக்க வேண்டும் என்று பேசினர். கார்த்திகேயன் நன்றி கூறினர்.

The post திருத்துறைப்பூண்டியில் தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமை சங்க கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: