பெண்களை பற்றி அவதூறு: பாஜ எம்பி, காங்கிரஸ் நிர்வாகிக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்

புதுடெல்லி: இமாச்சல் பிரதேசத்தில் உள்ள மண்டி மக்களவை தொகுதி வேட்பாளராக நடிகை கங்கனா ரணாவத் குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஷிரிநேட் தனது சமூக வலைதள பக்கத்தில் அவதூறான கருத்துகளை பதிவிட்டுள்ளார். அதே போல், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் குடும்பம் பற்றி பாஜ எம்பியான திலிப் கோஷ் கீழ்த்தரமாக பேசினார். இது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் அதற்கு மன்னிப்பு கேட்பதாக திலிப் கோஷ் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பெண்களை பற்றி கண்ணியக்குறைவாக பேசியதற்காக திலிப் கோஷ் மற்றும் சுப்ரியா ஷிரிநேட் ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது பொது இடங்களில் பேசுகையில் மிகவும் கவனமாக பேசும்படி இருவரையும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

The post பெண்களை பற்றி அவதூறு: பாஜ எம்பி, காங்கிரஸ் நிர்வாகிக்கு தேர்தல் ஆணையம் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: