மோடியை தமிழகத்திற்கு முதன்முதலில் அழைத்து வந்து அறிமுகப்படுத்தியவர் பாரிவேந்தர்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகழாரம்!

பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் டாக்டர் பாரிவேந்தரை ஆதரித்து, பெரம்பலூர் நான்கு ரோடு, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்கள் புடைசூழ ஊர்வலமாக வந்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அண்ணாமலை, 2013ம் ஆண்டில் குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது தமிழகத்திற்கு அழைத்து வந்து அறிமுகப்படுத்தியவர் பாரிவேந்தர் என புகழாரம் சூட்டினார்.

பெண்களை மரியாதையாக பாதுகாப்பாக நடத்தும் கட்சி பாரதிய ஜனதா எனக் கூறிய அண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், முசிறி, நாமக்கல், துறையூர் பகுதிக்கான ரயில்வே திட்டம் உறுதியாக நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்தார். அடித்தட்டு மக்களுக்காக உழைக்கக் கூடிய பாரிவேந்தர் வெற்றி பெற ஒவ்வொரு பாரதிய ஜனதா தொண்டரும், தலைவர்களும் உயிரைக் கொடுத்து பாடுபட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மேலும் பிரதமர் மோடி பாரிவேந்தருக்காக தாமரைச் சின்னத்தில் வாக்கு சேகரிக்க வருகை தர இருக்கிறார் என்றும் பிரதமர் மோடியின் பேரன்பைப் பெற்றவராக பாரிவேந்தர் திகழ்கிறார் என்றும் அண்ணாமலை பெருமிதம் பொங்க கூறினார்

The post மோடியை தமிழகத்திற்கு முதன்முதலில் அழைத்து வந்து அறிமுகப்படுத்தியவர் பாரிவேந்தர்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகழாரம்! appeared first on Dinakaran.

Related Stories: