“அவங்களுக்கு தைரியம் இல்ல”பஞ்சாப்பில் களமிறக்க பாஜவிடம் ஆளில்லை: காங்கிரஸ் விளாசல்

சண்டிகர்: மக்களவை தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை பாஜ நேற்று முன்தினம் வௌியிட்டது. அதன்படி கடந்த 28ம் தேதி ஆம் ஆத்மியில் இருந்து பாஜவுக்கு தாவிய சுஷில் குமார் ரிங்கு ஜலந்தர் தொகுதியிலும், கடந்த 27ம் தேதி காங்கிரசில் இருந்து விலகி பாஜவில் தஞ்சமடைந்த ரவ்னீத் சிங் பிட்டு லூதியானா தொகுதியிலும், காங்கிரசில் இருந்து கடந்த 14ம் தேதி விலகி பாஜவில் ஐக்கியமான பிரணீத் கவுர் பாட்டியாலா தொகுதியிலும் களமிறக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் அண்மையில் ஓய்வு பெற்ற அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரண் ஜித் சிங் அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிடுகிறார்.  பிற கட்சிகளில் இருந்து வந்தவர்களை அதே தொகுதியில் பாஜ மீண்டும் நிறுத்தியிருப்பது குறித்து காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. இதுகுறித்து பஞ்சாப் காங்கிரஸ் மூத்த தலைவர் சுக்ஜிந்தர் சிங் ரந்தவா கூறியதாவது, “இப்போது 400 என்று பாஜ கோஷமிடுகிறது. ஆனால் விவசாயிகள் போராட்டம் நடத்திய பஞ்சாப் மாநிலத்தில் பிற கட்சியில் இருந்து தாவியவர்களை பாஜ நிறுத்தி உள்ளது. பஞ்சாப்பில் போட்டியிட பாஜவில் ஆளில்லை. சொந்த கட்சியினரை களமிறக்க பாஜவுக்கு தைரியமில்லை” என்று விமர்சித்துள்ளார்.

The post “அவங்களுக்கு தைரியம் இல்ல”பஞ்சாப்பில் களமிறக்க பாஜவிடம் ஆளில்லை: காங்கிரஸ் விளாசல் appeared first on Dinakaran.

Related Stories: