கற்பக விநாயகா பொறியியல் கல்லூரியில் தொழில்துறையில் புதுமைகள் மாநாடு

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் தொழில்துறையில் புதுமைகள் எனும் தலைப்பில் மாநாடு நடந்தது. கல்லூரி நிர்வாக இயக்குனர் டாக்டர் அண்ணாமலை ரகுபதி தலைமை தாங்கினார். இயக்குனர் மீனாட்சி அண்ணாமலை முன்னிலை வகித்தார். தமிழக சட்ட மற்றும் சிறைத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, தமிழ்நாடு தொழில் துறை வளர்ச்சி கழக திட்ட இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் உதயசங்கர், டாக்டர் ராஜாராம், டாக்டர் ரின்ஜிம் அகர்வால், சர்வேஸ்வரன் ராஜகோபால், ஆதர்ஷ் நடராஜன், பரத்குமார் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட தொழில்துறை வல்லுனர்கள் பங்கேற்றனர். அப்போது, எதிர்காலத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வேலை வாய்ப்புகள். தொழில்துறையில் மாணவர்கள் முன்னேற்றம் காண தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டிய நெறிமுறைகள் குறித்து பேசப்பட்டது. நிகழ்ச்சியில், கல்லூரியின் முதல்வர் காசிநாத பாண்டியன் மற்றும் டீன் சுப்பாராவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்….

The post கற்பக விநாயகா பொறியியல் கல்லூரியில் தொழில்துறையில் புதுமைகள் மாநாடு appeared first on Dinakaran.

Related Stories: