நான் ரொம்ப சாதாரண ஆளுங்க பீகார் முன்னாள் முதல்வரின் கையில் ரூ.49,000 ரொக்கம்: வேட்புமனுவில் தகவல்

பாட்னா: பீகாரின் தனி தொகுதியான கயா மக்களவை தொகுதி இந்த தேர்தலில் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக கருதப்படுகிறது. இங்கு கடந்த 2014, 2019ம் ஆண்டுகளில் நடந்த மக்களவை தேர்தல்களில் போட்டியிட்ட இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா தலைவர் ஜிதன் ராம் மாஞ்சி தோல்வியை தழுவினார். தற்போது நடைபெற உள்ள தேர்தலில் கயா தொகுதியில் ராஷ்ட்ரிய ஜனதா தள வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சர்வஜீத் குமார்(49) களமிறக்கப்பட்டுள்ளார். இங்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வரும், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா தலைவருமான ஜிதன் ராம் மாஞ்சி(80) போட்டியிடுகிறார்.

நேற்று முன்தினம் கயாவில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் ஜிதன் ராம் மாஞ்சி வேட்பு மனு தாக்கல் செய்தார். அத்துடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், “2019 மக்களவை தேர்தலின்போது ரூ.10.2 லட்சம் மதிப்பில் அசையும் சொத்துகள், கையில் ரூ.40,000 ரொக்கப் பணம் இருந்தது. தற்போது ரூ.11.32 லட்சம் மதிப்பில் அசையும் சொத்துகள், ரூ.13.50 லட்சம் அசையா சொத்துகள், கையில் ரூ.49,000 ரொக்கப் பணம் உள்ளது. அசையும் சொத்துகளில் 4 வங்கி கணக்குகள், 2 கார்கள், ஒரு டபுள் பீப்பாய் ப்ரீச் லோடிங் துப்பாக்கி மற்றும் இரண்டு மாடுகள் உள்ளன. என் மனைவி சாந்தி தேவிக்கு ரூ.5.38 லட்சம் அசையா சொத்துகள் உள்ளன ” என்று தெரிவித்துள்ளார்.

The post நான் ரொம்ப சாதாரண ஆளுங்க பீகார் முன்னாள் முதல்வரின் கையில் ரூ.49,000 ரொக்கம்: வேட்புமனுவில் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: