பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த ஐதராபாத் மேயர், எம்பி உட்பட 4 பேர் காங்கிரசில் இணைய முடிவு

திருமலை: ஐதராபாத் மேயர், எம்பி, எம்எல்ஏ மற்றும் வேட்பாளர் என 4 பேர் ஒரேநாளில் பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைவதாக அறிவித்துள்ளனர். தெலங்கானாவில் கடந்த டிசம்பர் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் 10 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த சந்திரசேகரராவின் பிஆர்எஸ் கட்சி தோல்வியடைந்தது. காங்கிரஸ் வெற்றி பெற்று முதல்வராக ரேவந்த்ரெட்டி பதவி ஏற்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் யாரும் எதிர்பாராத வகையில் பிஆர்எஸ் கட்சியின் மூத்த எம்பி கேசவராவ், அவரது மகளும் ஐதராபாத் மாநகராட்சி மேயருமான விஜயலட்சுமி, பிஆர்எஸ் கட்சியின் மற்றொரு மூத்த தலைவரும், எம்எல்ஏவுமான கடியம் ஸ்ரீஹரி, வரங்கல் பிஆர்எஸ் கட்சியின் எம்பி வேட்பாளர் கடியம் காவ்யா ஆகிய 4 பேரும் காங்கிரசில் இணைவதாக அறிவித்துள்ளனர். இவர்கள் அனைவரும் முதல்வர் ரேவந்த்ரெட்டி முன்னிலையில் காங்கிரசில் இணைவார்கள் என தெரிகிறது.
தெலங்கானா முன்னாள் முதல்வரின் குடும்பத்தினர் ஊழல்வாதிகள் என அவர்கள் 4 பேரும் குற்றம்சாட்டியுள்ளனர். ஒரேநாளில் மூத்த எம்பி, மேயர், எம்எல்ஏ, வேட்பாளர் என 4 பேர் காங்கிரசுக்கு தாவியுள்ளதால் முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவ் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

The post பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த ஐதராபாத் மேயர், எம்பி உட்பட 4 பேர் காங்கிரசில் இணைய முடிவு appeared first on Dinakaran.

Related Stories: