வாக்காளர்களிடம் மாவட்ட தேர்தல் அலுவலர் விழிப்புணர்வு: தனியார் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு

 

புதுக்கோட்டை, மார்ச் 29:தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் 19ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அன்றில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. இதனையடுத்து புதுக்கோட்டை போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக பதட்டமான வாக்குசாவடிகளை கண்டுபிடித்து அதற்கு எவ்வாறு பாதுகாப்பு அறிப்பது, மற்றும் மாவட்டத்தில் உரிம் பெற்ற துப்பாக்கிளை போலீஸ் ஸ்டசனில் ஒப்டைப்பது மேலும் ரவுடிகளை கணக்கானிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் மற்றும் பல்வேறு சாதி அமைப்புகளின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் விடுதிகள் மற்றும் நட்டசத்திர ஓட்டல்களை கண்காணிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் நெருங்குவதால் அரசில் கட்சிகள் தங்களில் வேட்பாளர் பட்டியல்களை வெளியிட்டு வருகிறது. இதனால் வெளியாட்கள் யாராவது ஓட்டல்களில் தொடர்ந்து தங்கி இருக்கிறார்களா அவ்வாறு தங்கி இருந்தால் அவர்களின் செயல்பாடுகள் குறித்து கண்காணிக்கப்படும். மேலும் வாக்களர்களுக்கு பணம் கொடுக்க ஓட்டல்களில் தங்கி இருக்கிறார்களா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசாரின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறது.

The post வாக்காளர்களிடம் மாவட்ட தேர்தல் அலுவலர் விழிப்புணர்வு: தனியார் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு appeared first on Dinakaran.

Related Stories: