சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி பொது, போலீஸ் பார்வையாளர்கள் மாற்றம்

 

அரியலூர், மார்ச் 29: சிதம்பரம் (தனி) நாடாளுமன்றத் தொகுதிக்கு பொதுத் தேர்தல் பார்வையாளராக போர் சிங் யாதவ், சட்டம் மற்றும் ஒழுங்கு பார்வையாளராக ஜன்மேஜெயா கைலாஷ் நியமிக்கப்பட்டுள்ளனர். சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியின் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் தேர்தல் சம்மந்தமான புகார்களை தெரிவிக்க பொதுப்பார்வையாளர் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு பார்வையாளர் ஆகியோருக்கு நேற்று வழங்கப்பட்ட எண்ணிற்கு பதிலாக தற்போது தேர்தல் ஆணையத்தால் பொதுப்பார்வையாளருக்கு 93636 44821 என்ற செல்லிடைப்பேசி எண்ணிலும், சட்டம் மற்றும் ஒழுங்கு பார்வையாளருக்கு 93637 42660 என்ற செல்லிடைப்பேசி எண் வழங்கப்பட்டுள்ளது.

எனவே அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மேற்கண்ட செல்லிடைப்பேசி எண்களில் மட்டுமே வாட்ஸ்ஆப் மூலமாக தகவல்கள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம். மேலும், அரியலூர் அரசினர் சுற்றுலா மாளிகையில் அறை எண்.101-ல் பொதுப்பார்வையாளரிடம் நேரடியாக புகார் அளிக்கலாம். அதேபோன்று அரியலூர் அரசினர் சுற்றுலா மாளிகையில் அறை எண்.201-ல் சட்டம் மற்றும் ஒழுங்கு பார்வையாளரிடம் நேரடியாக புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி பொது, போலீஸ் பார்வையாளர்கள் மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: