மயிலாடும்பாறை காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா

வருசநாடு, மார்ச் 29: மயிலாடும்பாறை காளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. மயிலாடும்பாறை கிராமத்தில்  காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இவ்விழாவில் முளைப்பாரி ஊர்வலம், தீச்சட்டி எடுத்தல், ஆடலும் பாடலும் கலை நிகழ்ச்சி, கரகாட்டம், மயிலாட்டம் ஒயிலாட்டம் இளைஞர்களின் கலைக்கூத்து, மாறுவேடப்போட்டி, உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள் ஊர் நாட்டாமை முருகன் மற்றும் மயிலாடும்பாறை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

இதுகுறித்து கிராம பொதுமக்கள் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் கோடை வெயிலை போக்குவதற்கு மழை வரம் வேண்டியும் இவ்விழாவானது கொண்டாடுவது வழக்கம். இதே போல் இந்த ஆண்டும் கொண்டாடி உள்ளோம். மழை வரும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம் என தெரிவித்தனர். இதேபோல் கோவில்பாறை, வீரு சின்னம்மாள்புரம், வைகைநகர் உள்ளிட்ட பகுதிகளில் பங்குனித் திருவிழா நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

The post மயிலாடும்பாறை காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: