பணம் இல்லாததால் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விலகல் காங்கிரஸ் ஆட்சியில் ​​டீ விற்பவர் கூட தேர்தலில் போட்டியிட முடிந்தது: காங்கிரஸ் பதிலடி

புதுடெல்லி; காங்கிரஸ் ஆட்சியில் டீ விற்பவர் கூட தேர்தலில் போட்டியிட முடிந்தது. பா.ஜ ஆட்சியில் நிதியமைச்சர் கூட போட்டியிட முடியவில்லை என்று நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. மக்களவை தேர்தலில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதுச்சேரி தொகுதியில் இருந்து போட்டியிடுவார் என்று தகவல்கள் பரவின. ஆனால் அவர் தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட எங்கும் தேர்தலில் நிற்கவில்லை.

எனவே ஏன் போட்டியிடவில்லை என்பதற்கான காரணத்தை விளக்கி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறும்போது,’ தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை’ என்று கூறினார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த விளக்கம் இப்போது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி உரிய பதிலடி கொடுத்துள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா கூறுகையில்,’ காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, டீ வியாபாரிகள் கூட தேர்தலில் போட்டியிட முடிந்தது’ என்று தெரிவித்து உள்ளார்.

மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்திரி கூறுகையில்,’ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சூழ்நிலையால் பாதிக்கப்பட்டவர். அவரை நேர்மையற்ற நபர் என்று நாங்கள் ஒருபோதும் சொல்லவில்லை. அவர் ஒரு திருடன் என்றோ அல்லது அவள் ஒரு செல்வந்தர் என்றோ நான் சொல்லவில்லை. தென்னிந்தியாவில் தேர்தலில் போட்டியிட நிறைய பணம் தேவைப்படலாம். அதனால்தான் அவர் போட்டியிடவில்லை என்று நினைக்கிறேன். ‘ என்றார்.

The post பணம் இல்லாததால் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விலகல் காங்கிரஸ் ஆட்சியில் ​​டீ விற்பவர் கூட தேர்தலில் போட்டியிட முடிந்தது: காங்கிரஸ் பதிலடி appeared first on Dinakaran.

Related Stories: