கல்குவாரி அலுவலகம் சூறையாடிய 2 வாலிபர்கள் கைது செய்யாறு அருகே

செய்யாறு, மார்ச் 29: செய்யாறு அருகே கல்குவாரி அலுவலகம் சூறையாடப்பட்ட விவகாரம் தொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா கரந்தை கிராமத்தில் கல் குவாரி இயங்கி வருகிறது. இங்கிருந்து இயக்கப்படும் லாரிகளால் கிராமத்தில் உள்ள சாலை முற்றிலும் சேதமடைந்து பயன்பாட்டிற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டி கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் விதிமுறைகளி மீறி லாரிகளில் அதிகளவு பாரம் எற்றி செல்வதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் கல்குவாரியை மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 26ம்தேதி கரந்தை கிராமத்தை சேர்ந்த ஜெகதீசன்(20), வல்லரசு(21), யுவராஜ்(21) ஆகியோர் கல்குவாரிக்கு சென்று அங்கிருந்த 4 லாரிகளின் கண்ணாடிகளையும், அலுவலக கண்ணாடிகளையும் உடைத்தும் சேதப்படுத்தியுள்ளனர். மேலும் அங்கிருந்த பொருட்களை சூறையாடியதாகவும் கல்குவாரி நிர்வாக பொறுப்பாளர் பிச்சாண்டி தூசி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் வழக்கு பதிவு செய்து வல்லரசு, யுவராஜ் ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஜெகதீசனை தேடி வருகின்றனர்.

The post கல்குவாரி அலுவலகம் சூறையாடிய 2 வாலிபர்கள் கைது செய்யாறு அருகே appeared first on Dinakaran.

Related Stories: