பாலாலய நிகழ்ச்சியுடன் துவக்கம் கல்நெஞ்சக்காரரையும் உருக செய்த ‘பாசக்கார நாய்’

சீர்காழி மார்ச் 28:சீர்காழி அருகே இறந்த தனது குட்டியை குழிதோண்டி புதைத்து வேதனையுடன் திரியும் படக்காட்சிகள் வைரலாகி வருவதை அனைவரையும் வேதனை அடைய செய்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மணிக்கூண்டு அருகே ஓஎம்ஏ முசாகுதீன் மற்றும் அருகில் கடை வைத்திருப்பவர்கள் ஒரு நாயை பராமரித்து அவ்வப்போது உணவு வழங்கி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த நாய் 4 குட்டிகளை ஈன்றது. சில தினங்களுக்கு முன் சாலையில் கடக்கும்போது பைக் மோதி நாயின் காலில் அடிபட்டு காயம் ஏற்பட்டு, நடக்க முடியாமல் தவித்து வந்தது. லவ் பேர்ட்ஸ் மீன் குஞ்சுகள் கடை வைத்திருக்கும் ஆனந்த் என்பவர் உதவியுடன் காயம் அடைந்த நாய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நாயிக்கு சிகிச்சை அளிக்க ஆனந்த் வந்தபோது, அந்த நாயின் குட்டிகளில் ஒன்று இறந்து கிடந்தது. இதனை அறிந்த நாய் தனது குட்டியை வாயில் கவியவாறு எடுத்துச் சென்று அருகில் மண்ணைத் தோண்டி இறந்த தனது குட்டியை குழியில் போட்டு தனது வாயாலும், கால்களாலும், மண்ணைப் போட்டு மூடி விட்டு சோகத்தில் அங்கும் இங்கும் ஓடி வந்தது. நாயின் பாச போராட்டத்தை அறிந்த பொதுமக்கள் வியப்புடன் பார்த்து சென்றன. இந்த செய்தி கல் நெச்சக்காரரையும் கரைய வைப்பதாக இருந்தது. இந்த சோகமான சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

The post பாலாலய நிகழ்ச்சியுடன் துவக்கம் கல்நெஞ்சக்காரரையும் உருக செய்த ‘பாசக்கார நாய்’ appeared first on Dinakaran.

Related Stories: