தமிழகத்திற்கு பிரதமர் அடிக்கடி வருவது அச்சத்தின் வெளிப்பாடு இ.கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு

வலங்கைமான், மார்ச் 28: தமிழகத்திற்கு பிரதமர் அடிக்கடி வருவது அச்சத்தின் வெளிப்பாடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. வலங்கைமான் அருகேயுள்ள ஆவூரில் இந்தியா கூட்டணியின் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பரசன் தலைமை வகித்தார்.காங்கிரஸ் வட்டார தலைவர் ராமலிங்கம், இ.கம்யூ. ஒன்றிய செயலாளர் செந்தில்குமார்,மதிமுக ஒன்றிய செயலாளர் பிரதாப், மூவேந்தர் முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர் அம்பிகாபதி, மனிதநேய மக்கள் கட்சி மாநில விவசாய அணி செயலாளர் ரஹ்மத் அலி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இதில் இந்தியா கூட்டணியின் சார்பில் போட்டியிடும் இ.கம்யூ, வேட்பாளர் செல்வராஜ் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் இந்தியா கூட்டணி வலுவான நிலையில் உள்ளது. தற்போது 22க்கும் மேற்பட்ட அமைப்புகள் தமிழகத்தில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். தமிழகத்திற்கு பிரதமர் அடிக்கடி வருவது அச்சத்தின் வெளிப்பாடு. தேசிய அளவில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் இந்தியா கூட்டணியின் தேர்தல் அலுவலகத்தை திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் தட்சிணாமூர்த்தி, நகர செயலாளர் சிவனேசன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் வேட்பாளர் செல்வராஜ் திறந்து வைத்தார்.

The post தமிழகத்திற்கு பிரதமர் அடிக்கடி வருவது அச்சத்தின் வெளிப்பாடு இ.கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: