குளத்தையே காணோம்! முத்துப்பேட்டை அருகே அதிமுக விளம்பரத்தை அழித்த வருவாய்த்துறையினர்

முத்துப்பேட்டை, மார்ச் 28: ம், முத்துப்பேட்டை அருகே தினகரன் செய்தி எதிரொலியாக பஸ் ஸ்டாண்டில் அழிக்கப்படாமல் இருந்த அதிமுக விளம்பரத்தை வருவாய்த்துறையினர் அழித்தனர். நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதனையடுத்து அரசியல் தலைவர்கள் சிலைகளை மூடுதல், பொது இடத்தில் உள்ள கொடிக்கம்பங்கள், பேனர்கள் அகற்றவும், அரசியல் விளம்பரங்களை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் முத்துப்பேட்டை அருகேயுள்ள தம்பிக்கோட்டை கீழக்காடு பாமணி ஆற்று பாலம் கிழக்கு கடற்கரை சாலை அருகே பேருந்து நிறுத்த நிழற்குடை முழுவதும் ஜெயலலிதா பிறந்தநாள் விளம்பரம் மட்டும் அழிக்கப்படாமல் இருந்தது. இது குறித்து கடந்த 26ம் தேதி தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து மறுநாள் 27ம் தேதி முத்துப்பேட்டை வருவாய் அலுவலர்கள் மற்றும் அதிராம்பட்டினம் வருவாய்த்துறை அலுவலர்களும் அங்கு சென்று பஸ் ஸ்டாண்ட் கட்டிடம் முழுவதும் இருந்த அதிமுக சுவர் விளம்பரத்தை வண்ணம் பூசி அழித்தனர்.

The post குளத்தையே காணோம்! முத்துப்பேட்டை அருகே அதிமுக விளம்பரத்தை அழித்த வருவாய்த்துறையினர் appeared first on Dinakaran.

Related Stories: