தஞ்சாவூரில் சிறுதானிய பயிர்கள் பதப்படுத்துதல் மதிப்பு கூட்டுதல் வாய்ப்பு குறித்த விழிப்புணர்வு விவசாயிகள், தொழில்முனைவோர்கள் பங்கேற்பு

தஞ்சாவூர், மார்ச் 28:தஞ்சாவூரில் உள்ள தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் மற்றும் தஞ்சாவூர் தொழில் வர்த்தகம் சங்கம் ஆகியன இணைந்து சிறுதானிய பயிர்களைப் பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக் கூட்டுதல் வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவன இயக்குநர் பழனிமுத்து தலைமை வகித்தார். பேராசிரியர்கள் ஹேமா, மகேந்திரன், வெங்கடாசலபதி ஆகியோர் சிறுதானிய உணவுகளை பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக் கூட்டுதல் சார்ந்த பல்வேறு நுட்பங்கள் மற்றும் வழிமுறைகளை விளக்கினர். நிகழ்ச்சியில் விவசாயிகள், தொழில்முனைவோர், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தஞ்சாவூர் தொழில் வர்த்தக சங்கத் தலைவர் மாறவர்மன் வரவேற்றார். செயலாளர் குகனேஸ்வரன் நன்றி கூறினார்.

The post தஞ்சாவூரில் சிறுதானிய பயிர்கள் பதப்படுத்துதல் மதிப்பு கூட்டுதல் வாய்ப்பு குறித்த விழிப்புணர்வு விவசாயிகள், தொழில்முனைவோர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: