திருவண்ணாமலை மற்றும் ஆரணி தொகுதிகளுக்கு தேர்தல் பொது பார்வையாளர்கள் நியமனம் விதிமீறல்கள் தொடர்பாக புகார் அளிக்கலாம்

திருவண்ணாமலை, மார்ச் 28: திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் பொது பார்வையாளர், செலவின பார்வையாளர்கள், பாதுகாப்பு(காவல்) பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. மேலும், பார்வையாளர்களை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்க வசதியாக செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, திருவண்ணாமமலை மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் செலவின பார்வையாளர் குர்பிரீத் வாலியா (செல்:90429 29964). தேர்தல் பொது பார்வையாளர் மகாவீர் பிரசாத் மீனா (செல் 81229 04303), தேர்தல் பாதுகாப்பு(காவல்) பார்வையாளர் பாட்டுலா கங்காதர் (செல் 81480 02216).

ஆரணி மக்களவைத் தொகதிக்கான தேர்தல் செலவின பார்வையாளர் அப்துல் மதீன்கான் (செல் 90429 67127), பொது பார்வையாளர் சுஷாந்த் கவுரவ் (செல் 81229 53282), பாதுகாப்பு (காவல்) பார்வையாளர் பாட்டுலா கங்காதர் (செல் 81480 02216). எனவே, பொதுமக்கள் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தேர்தல் குறித்த அனைத்து விதமான புகார்களையும் பார்வையாளர்களிடம் செல்போனில் தொடர்பு கொண்டோ அல்லது அவர்கள் தங்கியிருக்கும் இடங்களில் நேரில் சந்தித்தோ தெரிவிக்கலாம் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

The post திருவண்ணாமலை மற்றும் ஆரணி தொகுதிகளுக்கு தேர்தல் பொது பார்வையாளர்கள் நியமனம் விதிமீறல்கள் தொடர்பாக புகார் அளிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: