பாஜக உடன் பாமக கூட்டணி அமைத்ததால் பாமகவை சேர்ந்த 50 நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்

சென்னை: பாஜக உடன் கூட்டணி அமைத்ததால் காட்டாங்குளத்தூர் ஒன்றிய பாமக செயலாளர் சத்யா உள்ளிட்ட அப்பகுதியைச் சேர்ந்த 50 நிர்வாகிகள் பாமகவில் இருந்து விலகி, அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். காட்டாங்குளத்தூர் பகுதி பாமக மொத்தமாக கூண்டோடு காலியாகி உள்ளதாக அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று அவர்கள் மொத்தமாக திமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர். அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

பாஜக – பாமக கூட்டணி தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலை ஒன்றாக சந்திக்கிறது. பாஜகவுடன் கூட்டணி அமைத்து பாமக 10 நாடாளுமன்ற தொகுதிகளில் தேர்தலை சந்திக்கும் என்று பாமக அறிவித்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை எல்லாம் பாமக – அதிமுக கூட்டணியே உறுதியாகும் என்றே தகவல்கள் வந்தன.

அதிமுக சார்பாக பாமகவின் நிறுவனர் ராமதாஸிடம் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இப்போது வைக்கும் கூட்டணியை 2026லும் தொடரலாம். நாம் சேர்ந்தால் சில இடங்களில் 2ம் இடம் அல்ல வெற்றிபெறும் வாய்ப்பு கூட உள்ளது. பாஜக கூட்டணியில் அதற்கு வாய்ப்பு இல்லை. 2026 தேர்தலில் அதிமுக கூட்டணி நல்ல பலன் தரும் என கட்சிகாரர்கள் சொல்கிறார்கள் என சொல்லி அதிமுக உடன் கூட்டணி வைக்க பாமக முடிவு செய்தது. இதை முதலில் பாமக ஏற்றுக்கொண்டு கூட்டணியை இறுதி செய்வதாக இருந்தது. ஆனால் கடைசி நொடியில் பாமக – பாஜக கூட்டணி கையெழுத்தானது.

பாஜக, அதிமுக இரண்டுமே ராஜ்ய சபா கொடுக்கவில்லை. பாஜக 10 சீட் தருவதாக கூறியது. அதிமுக 8 சீட் தருவதாக கூறியது. அடுத்த முறை மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரும் வாய்ப்பு உள்ளது என்று அதனால் பாமக இந்த முடிவை எடுத்துள்ளது. தமிழ்நாட்டில் பாமக நிர்வாகிகளை கடுமையாக அப்செட் ஆக்கி உள்ளது. வெற்றி கூட்டணியை உடைத்துக்கொண்டு சென்றதால் அவர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

இந்த நிலையில்தான் பாஜக உடன் கூட்டணி அமைத்ததால் காட்டாங்குளத்தூர் ஒன்றிய பாமக செயலாளர் சத்யா உள்ளிட்ட அப்பகுதியைச் சேர்ந்த 50 நிர்வாகிகள் பாமகவில் இருந்து விலகி திமுகவில் அமைச்சர் தாமோ அன்பரசன் முன்னிலையில் இணைந்தனர்.

The post பாஜக உடன் பாமக கூட்டணி அமைத்ததால் பாமகவை சேர்ந்த 50 நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர் appeared first on Dinakaran.

Related Stories: