அமலாக்கத்துறை காவலில் உள்ள டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு உடல்நிலை பாதிப்பு என ஆம் ஆத்மி கட்சி தகவல்

டெல்லி : அமலாக்கத்துறை காவலில் உள்ள டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு உடல்நிலை பாதிப்பு என ஆம் ஆத்மி கட்சி தகவல் அளித்துள்ளது. முதலமைச்சர் கெஜ்ரிவாலின் சர்க்கரை அளவு ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் கெஜ்ரிவால் கடந்த 24-ம் தேதி கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலை காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

The post அமலாக்கத்துறை காவலில் உள்ள டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு உடல்நிலை பாதிப்பு என ஆம் ஆத்மி கட்சி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: