சிறுமி பலாத்கார வழக்கில் தொழிலாளிக்கு 3 ஆயுள் தண்டனை

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருச்சூர் அருகே மாற்றுத்திறனாளியான 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்த ஆசாமிக்கு 3 ஆயுள் தண்டனையுடன் 10 வருடம் கடுங்காவல் சிறையும், ₹3.40 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.கேரள மாநிலம் திருச்சூர் அருகே கைப்பரம்புகோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரேமன் (57). கூலித் தொழிலாளி. கடந்த 2019 மற்றும் 2022ம் ஆண்டில் அதே பகுதியை சேர்ந்த 14 வயதான மாற்றுத்திறனாளி சிறுமியை பலாத்காரம் செய்ததாக புகார் கூறப்பட்டது.

இது தொடர்பாக பேராமங்கலம் போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து பிரேமனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு குன்னம்குளம் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், பிரேமனுக்கு 3 ஆயுள் தண்டனையுடன், 10 வருடம் கடுங்காவல் சிறையும், ₹3.40 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. மேலும் ஆயுள் முழுவதும் அவர் சிறையில் இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post சிறுமி பலாத்கார வழக்கில் தொழிலாளிக்கு 3 ஆயுள் தண்டனை appeared first on Dinakaran.

Related Stories: