திருத்துறைப்பூண்டி 17வது வார்டு பகுதியில் பிளாஸ்டிக் பயன்படுத்த மாட்டோம் பெண்கள் உறுதி மொழி ஏற்பு

 

திருத்துறைப்பூண்டி, மார்ச் 27: திருத்துறைப்பூண்டி 17வது வார்டு பகுதியில் பிளாஸ்டிக் பயன்படுத்த மாட்டோம் என்று பெண்கள் உறுதிமொழி ஏற்றனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிகளில் தூய்மை இயக்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது, மேலும் அனைத்து மக்களிடமும் குப்பை மேலாண்மை குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது.

மக்கும் குப்பை, மக்கா குப்பைகளை தனித்தனியே சேகரித்து கையாளப்படுகிறது, இது குறித்து சுற்றுச்சூழல் பயற்சியாளர் பாலம் செந்தில்குமார் கூறுகையில், நகராட்சி பகுதிகளில் 24-வார்டுகளிலும் சுற்றுச்சூழலையும், நீர்நிலைகளை பாதுகாக்கும் விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் நெகிழி பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நீர்நிலைகளில் அவற்றை எறிய கூடாது, குறிப்பாக நெகிழிகளை தீயிட்டு எரிக்க கூடாது.

அவ்வாறு எரிக்கும்போது அதிலிருந்து வெளியாகும் நச்சு வாயுவான டையாக்சின் நீண்ட நாட்களுக்கு வளிமண்டலத்தில் தங்கி மனிதர்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும். மேலும் நன்மை செய்யும் பூச்சிகள், நுண்ணுயிர்கள், பறவைகள் அழிகின்றன. எனவே யாராவது நெகிழியை எரித்தால் அவர்களுக்கு பாதிப்புகள் குறித்து எடுத்துரைக்க வேண்டும், இதுகுறித்து அனைவரும் ஒன்றிணைந்து இப்பணியை செயல்படுத்துவோம் என்றார். இனி நெகிழியை பயன்படுத்தவோ, எரிக்கவோ மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர், நிகழ்ச்சியில் மகளிர் குழுவினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post திருத்துறைப்பூண்டி 17வது வார்டு பகுதியில் பிளாஸ்டிக் பயன்படுத்த மாட்டோம் பெண்கள் உறுதி மொழி ஏற்பு appeared first on Dinakaran.

Related Stories: