பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு உற்சாகமாக தேர்வு எழுதிய மாணவர்கள்

 

மன்னார்குடி, மார்ச். 27: தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 4,107 மையங்களில் 9.38 லட்சம் மா ணவ மாணவிகள் பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வினை நேற்று எழுதினர். தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று தொடங்கி அடுத்த மா தம் ஏப்ரல் 8 வரை நடைபெற உள்ளது.நேற்று மொழி பாடத் தேர்வு நடை பெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் 15,112 பேர் தேர்வு எழுதி னர்.இதில் 7,354 மாணவர்களும் 7,758 மாணவிகளும் அடங்குவர்.

மன்னார்குடியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மையங்களான அரசு உதவிபெறும் தேசிய மேல்நிலை பள்ளி, அரசு உதவிபெறும் பின்லே மேல் நிலைப்பள்ளி, அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளி, தூயவளனார் பெண் கள் மேல்நிலைப்பள்ளி, பாரதிதாசன் மற்றும் சண்முகானந்தா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளிகளில் மாணவர் கள் தேர்வு எழுதினர்.

நேற்று 10 ம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதிய மாணவர் கபில்ராம் கூறிய தாவது, தமிழ் பாடத்தேர்வு மிக எளிதாக இருந்தது. இலக்கணப் பாடப் பிரி விலிருந்து வந்த கேள்விகளும் எந்தவித கடினங்களும் இல்லாமல் எளிதா கவே இருந்தது. இனி வரும் தேர்வுகளும் இது போலவே இருந்தால் மிக நன்றாகவே இருக்கும் என்றார்.

The post பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு உற்சாகமாக தேர்வு எழுதிய மாணவர்கள் appeared first on Dinakaran.

Related Stories: