தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் என் ஓட்டு என் உரிமை விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி

 

தஞ்சாவூர், மார்ச் 27:தஞ்சாவூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் நேர்மையாக 100 சதவீதம் வாக்களிக்க வேண்டியதை வலியுறுத்தி”என் ஓட்டு என் உரிமை” என்னும் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியினை மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். தஞ்சாவூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நேர்மையாக 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் நேற்று நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் நேர்மையாக 100 சதவீதம் வாக்களிக்க வேண்டியதை வலியுறுத்தி ”என் ஓட்டு என் உரிமை” என்னும் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியினை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ராமநாதன் ரவுண்டான வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை 100 சதவீதம் வாக்களிக்க வேண்டியதை வலியுறுத்தி பல்வேறு துண்டு பிரசுரங்கள் வாக்கியங்கள் அடங்கிய பதாகைகளுடன் சுமார் 200க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் இருசக்கர வாகனத்தில் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா அவர்கள், உதவி ஆட்சியர் (பயிற்சி) விஷ்ணுபிரியா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் ராஜேஸ்வரி மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் என் ஓட்டு என் உரிமை விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி appeared first on Dinakaran.

Related Stories: