அரியலூர் மாவட்டம் செந்துறையில் 100 சதவீதம் வாக்களிக்க ரங்கோலி கோலம் வரைந்து விழிப்புணர்வு

 

அரியலூர், மார்ச் 27: அரியலூர் மாவட்டம், செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024ல் வாக்காளர்கள் 100 சதவீதம் நேர்மையாக வாக்களிப்பது குறித்து ரங்கோலி கோலத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்களிடையே நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி உறுதி செய்யும் விதமாக செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

மேலும், செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாக ரங்கோலி கோலமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.

இதேபோன்று அரியலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விழிப்புணர்வு வாகனங்களின் மூலம் 100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்வில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் லெட்சுமணன், செந்துறை வட்டாட்சியர் வேலுமணி, செந்துறை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

The post அரியலூர் மாவட்டம் செந்துறையில் 100 சதவீதம் வாக்களிக்க ரங்கோலி கோலம் வரைந்து விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: