விழிப்புணர்வு வாசகத்துடன் பால் பாக்கெட் விற்பனையை கலெக்டர் தொடங்கி வைத்தார்

 

காரைக்கால்,மார்ச் 27: காரைக்காலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு வாசகத்துடன் பால் பாக்கெட் விற்பனையை கலெக்டர் மணிகண்டன் தொடங்கி வைத்தார். காரைக்கால் மாவட்ட தேர்தல் துறை மற்றும் ஸ்வீப்பும் இணைந்து நடைபெற இருக்கின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் காரைக்கால் மாவட்டத்தில் 100% வாக்களிப்பு பெற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக காரைக்கால் கூட்டுறவு பால் பாக்கெட்டில் அனைவரும் வாக்களிப்போம், நேர்மையாக வாக்களிப்போம்.

வாக்களிப்பது எங்கள் ஜனநாயக கடமை, 100% சதவீதம் வாக்களிக்க பாடுபடுவோம், என் வாக்கு எண் உரிமை, கண்ணியமாக வாக்களிப்போம், உங்களது வாக்கு விற்பனைக்கு அல்ல, அவசியமாக வாக்களிப்போம் என்ற தேர்தல் விழிப்புணர்வு அடங்கிய அச்சிடப்பட்ட பால் பாக்கெட்டுகளை விற்பனை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் காரைக்கால் மாவட்ட தேர்தல் அதிகாரி மணிகண்டன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்தார். தினமும் 28 ஆயிரம் அரை லிட்டர் பால் பாக்கெட்டுகளில் 18 தேர்தல் விழிப்புணர்வு வாசகங்களில் தினமும் ஒரு விழிப்புணர்வு வாசகங்களுடன் காரைக்கால் முழுவதும் தேர்தல் முடியும் வரை விநியோகிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

The post விழிப்புணர்வு வாசகத்துடன் பால் பாக்கெட் விற்பனையை கலெக்டர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: