கே.வி.குப்பம் அருகே உரிய ஆவணம் இன்றி லோடு வேனில் கொண்டு சென்ற ₹67.50 ஆயிரம் பறிமுதல்

கே.வி.குப்பம், மார்ச் 27: கே.வி.குப்பம் அருகே உரிய ஆவணம் இன்றி லோடு வேனில் கொண்டு சென்ற ₹67.50 ஆயிரத்தை நிலை கண்காணிப்பு குழுவினர் நேற்று பறிமுதல் செய்தனர். மக்களவை தேர்தலையொட்டி கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, லத்தேரி-பரதராமி சாலையில் செஞ்சி கூட்ரோடு பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக வந்த லோடு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், வேனில் வந்த காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கல் பகுதியை சேர்ந்த டெல்லி பாபு(50) என்பவர் ₹67,500 ரொக்கம் கொண்டு செல்வது தெரியவந்தது.
விசாரணையில், அவர் பொய்கை மாட்டுச்சந்தையில் மாடு விற்பனை செய்த பணம் என கூறினார். ஆனால், அதற்குரிய ஆவணம் எதுவும் இல்லாததால் அந்த பணத்தை நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர். பின்னர், அந்த பணத்தை கே.வி.குப்பம் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் பிரிவு அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, குடியாத்தம் சார் கருவூலத்தில் ெகாண்டு சேர்க்கப்பட்டது.

The post கே.வி.குப்பம் அருகே உரிய ஆவணம் இன்றி லோடு வேனில் கொண்டு சென்ற ₹67.50 ஆயிரம் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: