அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு கும்பகோணத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு

கும்பகோணம், மார்ச்26: மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த கும்பகோணத்தில் நேற்று நடைபெற்ற போலீசார் கொடி அணி வகுப்பில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என மக்களிடையே ஜனநாயக கடமையை நிறைவேற்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கும்பகோணத்தில் டிஎஸ்பி கீர்த்திவாசன் தலைமையில் போலீசாரின் கொடி அணி வகுப்பு நேற்று நடைபெற்றது.

தாராசுரத்தில் இருந்து தொடங்கிய இந்த கொடி அணிவகுப்பு மாநகரின் முக்கிய வீதிகளின் வழியாக மகாமககுளக்கரை வரை சென்று நிறைவு பெற்றது. சுமார் 5 கிமீ தொலைவிற்கு இந்த கொடி அணி வகுப்பு நடைபெற்றது. இந்த கொடி அணி வகுப்பில் இன்ஸ்பெக்டர்கள் சிவசெந்தில் குமார், மலைச்சாமி, சுதா, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பிரவீன், மத்திய தொழில் பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் துணை ராணுவத்தினர், போலீசார் உள்ளிட்ட பலர் பங்கேற்று கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனர்.

The post அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு கும்பகோணத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு appeared first on Dinakaran.

Related Stories: