பங்குனி உத்திரத்தை முன்னிட்டு மஞ்சவயல் முருகன் கோயிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை

பட்டுக்கோட்டை, மார்ச்26:மிகவும் பிரசித்திபெற்ற ஸ்தலங்களில் ஒன்றான தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்தமஞ்சவயல் முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடந்தது. திருவிழாவை முன்னிட்டு பட்டுக்கோட்டையிலிருந்து நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் பாதயாத்திரையாக மஞ்சவயல் முருகன் கோயிலுக்கு சென்றனர். முதலில் பட்டுக்கோட்டை சாமுமுதலி தெரு மாரியம்மன் கோயிலிலிருந்து பாதயாத்திரையாக புறப்பட்டு அணைக்காடு, துவரங்குறிச்சி, செங்கப்படுத்தான்காடு வழியாக மஞ்சவயல் முருகன் கோயிலை அடைந்தனர். அதனைத் தொடர்ந்து அனைவரும் ஒன்றிணைந்து அர்ச்சனை தட்டுடன் ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர்.

அங்கு விநாயகருக்கும், முருகனுக்கும் தனித்தனியாக அர்ச்சனை செய்து வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து முருகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. அதனைத் தொடர்ந்து பெரிய தீபாராதனை காட்டப்பட்டது. நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து கோயில் பின்புறம் உள்ள மண்டபத்தில் அனைவருக்கும் டிபன் வழங்கப்பட்டது. அதேபோல் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு மஞ்சவயல் முருகன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் பால்குடம்எடுத்துவந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

The post பங்குனி உத்திரத்தை முன்னிட்டு மஞ்சவயல் முருகன் கோயிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை appeared first on Dinakaran.

Related Stories: