பட்டுக்கோட்டை அடைக்கலம் காத்த அய்யனார் கோயிலில் மாவிளக்கு திருவிழா

பட்டுக்கோட்டை, மார்ச் 26: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அடைக்கலம் காத்த அய்யனார் கோயில் பங்குனி பெருந்திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 18ம் தேதி (திங்கட்கிழமை) காப்பு கட்டுதலுடன் நிகழ்ச்சி தொடங்கி தொடர்ந்து திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவில் முக்கிய நாளான நேற்று பெண்கள் மாவிளக்குத் திருவிழா நேற்று இரவு நடந்தது. நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் ஒன்றுதிரண்டு கோயிலில் மாவிளக்கு வைத்து வழிபட்டனர்.

திருவிழாவின் முக்கிய நாளான தேரோட்டம் இன்று (26ம் தேதி) செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இன்றுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழா நாட்களில் ஒவ்வொரு நாளும் அடைக்கலம் காத்த அய்யனார் வீதி உலா வந்தார். திருவிழா காலங்களில் பட்டிமன்றம், நாடகங்கள், இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் சக்திவேல், செயல் அலுவலர் சுந்தரம் மற்றும் ரெங்கராஜ் உள்ளிட்ட கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை பட்டுக்கோட்டை இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் செய்திருந்தனர்.

The post பட்டுக்கோட்டை அடைக்கலம் காத்த அய்யனார் கோயிலில் மாவிளக்கு திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: